வியாழன், 18 ஜூன், 2015

FORUM அறைகூவலுக்கிணங்க நமது மாவட்டத்தில் BSNL வளர்ச்சிக்கான முதல் கலந்தாய்வுக் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
கடலூர் மாவட்ட FORUM சார்பாக எடுக்கப்பட்ட முடிவின் படி BSNL வளர்ச்சிக்காக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்தாய்வு கூட்டம் முதன் முதலாக சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் 16-06-2015 அன்று நடைபெற்றது. கூட்டத்தை சிதம்பரம் கோட்ட பொறியாளர் திரு.N.செல்வராஜ் அவர்கள் தலைமையேற்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக திரு.K.சமுத்திரவேலு,DGM/CFA,திரு.P.சாந்தகுமார்,DGM/Fin.,திரு.M.சேகர்,AGM/N.W ஆகியோரும், தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக திரு.C.பாண்டுரங்கன்,மாவட்டதலைவர்.SNEA,தோழர்.இரா.ஸ்ரீதர்,மாவட்டசெயலர்.NFTE,தோழர்.K.T.சம்மந்தம் .மாவட்டசெயலர்-BSNLEU மற்றும் தலமட்ட அதிகாரிகளும், 80 க்கும் மேற்பட்ட ஊழியர்களும் கலந்துகொண்டனர். நிர்வாக வளர்ச்சிப்பற்றி அதிகாரிகளும், தொழிற்சங்க தலைவர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். ஊழியர் தரப்பில் கேபிள் பழுதுகள் நிறைய உள்ளதையும் அதனை விரைந்து முடிக்க கூடுதலாக ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கோரியதை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டு, கூடுதல் ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பதாக உறுதியளித்துள்ளது. மேலும் டூல்ஸ் மற்றும் புதிய HMT-கள் உடனடியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர். ஊழியர்களும் கூடுதலாக புதிய இணைப்புகளை அதிகப்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்ய தயாராக உள்ளதாக உறுதியளித்துள்ளனர். சிதம்பரத்தில் நடைபெற்ற இந்தக்கூட்டம் பயனுள்ளதாக அமைந்ததாக மாவட்ட நிர்வாகமும் தொழிற்சங்கமும் கருதுகிறது.








கருத்துகள் இல்லை: