செவ்வாய், 5 ஏப்ரல், 2016

வெளியில் சொல்ல வெட்கம்....

30 03 2016 அன்று PLI ( PRODUCTIVITY LINKED INCENTIVE ) கமிட்டி கூட்டம் நடக்கப் போவதாக BSNL நிர்வாகம் ஒரு நாளைக்கு முன்பாக 29.03.2016 அன்று   தெரிவித்தது . மிக மிக குறுகிய கால அவகாச கால அறிவிப்பாக இருப்பதாலும் ஏற்கனவே 30 03 2016 அன்று குஜராத்தில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கலந்து கொள்ள இயலாது என்றும் எனவே இன்னொரு தேதியில் நடத்தலாம் என்று நமது சங்கம் கேட்டுக்கொண்டது. ஆனாலும் நமது வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளாமல் நிர்வாகம் அவசரம் அவசரமாக – தன்னிச்சையாக - 30 03 2016 அன்று கூட்டத்தை நடத்தியுள்ளது.
மொத்தத்தில் கமிட்டியில் இரண்டு பிரதிநிதிகள் மட்டுமே என்பதும் அதில் பிரதான தொழிற்சங்கத்தைச் சார்ந்த பிரதிநிதி, அதுவும் STAFF SIDE SECRETARY வராமல் தான் மட்டும் கலந்து கொள்வது சரியல்ல என்பதை குறைந்த பட்ச தொழிற்சங்க அறிவு உள்ள யாரும் ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால், NFTE பிரதிநிதி திருவாளர் இஸ்லாம் அஹமது மட்டும் தன்னந்தனியாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச்சு வார்த்தை ( ? )நடத்தியுள்ளார். ஒரு மாத கால அறிவிப்பு இல்லாத காரணத்தால் நமது சங்கம் கலந்து கொள்ள வில்லை என்று கோயபல்ஸ் பிரச்சாரமும் செய்துள்ளார். இதன் மூலமே ஒரு துரோகம் செய்ய NFTE பிரதிநிதி திருவாளர் இஸ்லாம் அஹ்மது முடிவு செய்துள்ளதை நாம் புரிந்து கொள்ளலாம். 
கூட்டத்தில் 2014-15 ஆண்டிற்கு ஒரு அற்பத்தொகையை PLI ஆக BSNL நிர்வாகம் தெரிவித்துள்ளது. மிகக் குறைவு என்று கருதினாலும் அதை தான் எதிர்க்கவில்லை என்று திரு. இஸ்லாம் அகமது தெரிவித்துள்ளார். கமிட்டி தன்னுடைய பரிந்துரையை உரிய இடத்தில் முடிவிற்காக சமர்ப்பிக்கும் என்றும் திருவாய் மலர்ந்துள்ளார்.
அற்பத்தொகை எவ்வளவு என்று இதுவரை அவர் தெரிவிக்க வில்லை. நமது சங்கம் PLI தொகை இரண்டு இலக்க அற்பத்தொகை என்று அறிந்து எதிர்ப்பு தெரிவித்ததுடன் போராட்டத்தையும் அறிவித்த பிறகு, NFTEபிரதிநிதி 31 03 2016 அன்று அந்தர்பல்டி அடித்து அந்த தொகையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளார்.
கடைசி வரை அந்தத் தொகை எவ்வளவு என்று அவர் தரப்பில் தெரிவிக்கவில்லை. உண்மையைத் தெரிவிக்கவும் அவர் தயாராக இல்லை. வெளியில் சொல்ல வெட்கப்பட்டு MINUTES வந்த பிறகு தெரியும் என்று கூனிக் குறுகி பேசி வருகின்றார். மாட்டு வியாபாரிகள் துண்டைப் போட்டு வெளியில் தெரியாமல் தொகையை பேரம் பேசுவது போல் நிர்வாகத்துடன் பேரம் நடந்துள்ளது.
ஏன் இந்த அவல நிலை ?
பொறுப்புள்ள எந்த தொழிற்சங்கமும் இத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ளாது.ஊழியர் நலனுக்கு எதிராக ரகசிய பேரம் பேசும் இத்தகைய போக்கை NFTE சங்க உறுப்பினர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.


கருத்துகள் இல்லை: