செவ்வாய், 11 ஏப்ரல், 2017

இணைந்த கிளைச்செயலர்கள் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!

         நமது இரண்டு சங்கங்களின் (BSNLEU & TNTCWU) இணைந்த கிளைச்செயளர்கள் கூட்டம் 12.04.2017 மாலை 5.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர்கள் தோழர் A.அண்ணாமலை, தோழர் S.V.பாண்டியன் ஆகியோர் கூட்டு தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும், மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் உரிய நேரத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
 பொருள் : TNTCWU மாநில செயற்குழு முடிவுகள் அமுலாக்கம்
 
தோழமையுள்ள,
 K.T.சம்பந்தம்

மாவட்ட செயலர்

வெள்ளி, 17 மார்ச், 2017

அவசர கூட்டம்

தோழர்களே தோழியர்களே,
இன்று(17.03.2017) மாலை 4.30 மணிக்கு கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் கிளைசெயலர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.அனைத்து கிளைச்செயலர்களும்,மாவட்ட மையத்தில் உள்ள மாவட்ட சங்க நிர்வாகிகளும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
பொருள் : இந்த ஆண்டிற்கான TT சுழல் மாற்றல் கவுன்சிலிங்                                             சம்மந்தமாக ஆலோசனை கூட்டம். 
தவறாமல் பங்கேற்பீர்.
தோழமையுடன், 
K.T.சம்பந்தம்,
மாவட்ட செயலர் 

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017


இரங்கல் செய்தி

தோழர்களே !
நம்முடன் கடலூர் பொதுமேலாளர் அலுவலகத்தில் AGM,மார்கட்டிங்காக பணியாற்றிய தோழர் C.B.ஜெயராம்குமார் அவர்கள் இன்று காலை  (௦3.O2.2017) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

செவ்வாய், 31 ஜனவரி, 2017

கிளைச்செயர்கள் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது கிளைச்செயர்கள் கூட்டம் 04.02.2017 மாலை 3.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர் தோழர் A.அண்ணாமலை தலைமையில் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும், மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் உரிய நேரத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
குறிப்பு:கிளைச்செயலர்கள்  வரும்போது  அகிலஇந்திய மாநாட்டு நன்கொடை ரசீது புத்தகங்களைக் கொண்டுவரவேண்டும்.மேலும்  செயலாளர்கள், முகவரி மற்றும் அந்தக் கிளையின் உறுப்பினர் எண்ணிக்கை, அந்தக் கிளைக்கு தேவையான தொலை தொடர்பு தோழன் பத்திரிக்கையின் எண்ணிக்கை மற்றும் TELE CRUSADER பத்திரிக்கையின் எண்ணிக்கை ஆகியவற்றிற்கான விபரங்களையும் கட்டாயம் கொண்டுவர வேண்டுகிறோம். 
                                                             தோழமையுள்ள,
                                                                 K.T.சம்பந்தம்
                                                              மாவட்டசெயலர்